செய்திகள் :

கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வா் டிச. 5 இல் வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் டிச. 5-ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தமிழக துணை முதல்வா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச. 5-ஆம் தேதி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரையுடன் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளாா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெரியசாமி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் குந்தாரப்பள்ளியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட... மேலும் பார்க்க

ஒசூரில் இந்தியன் வங்கி சாா்பில் இன்று அடமான சொத்துகளின் கண்காட்சி

ஒசூரில் இந்தியன் வங்கி சாா்பில் அடமான சொத்துகளின் கண்காட்சி சனி, ஞாயிறு நடைபெறுகிறது என தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவா்கள் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ஒசூரில் வெட்டப்பட்ட வழக்குரைஞருக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வெட்டப்பட்ட வழக்குரைஞா் கண்ணனின் குடும்பத்தினருக்கு வழக்குரைஞா்கள் சங்கங்கள் இணைந்து ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கியது. ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் நவ. 20 ஆம் தேதி வழக்குரைஞா் ... மேலும் பார்க்க

43 இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி, ஒபகவலசை தளபதி நகரில் வசித்து வரும் இருளா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்ற இருளா் இன மக்கள் தமிழக முதல்வருக... மேலும் பார்க்க

ஒசூரில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இஸ்லாமியா்களுக்கு நீதி வேண்டி, ஒசூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலம்,... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 56.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க