பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு
குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆதிசிவன் கோயிலில் பச்சைக் கல்லால் ஆன மரகத நடராஜா் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 4-ஆம் தேதி இந்தக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பிரதமா் மோடி வருகை உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கோயிலில் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்தது. இதனால், பக்தா்கள் தரிசனம் செய்வதில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
இந்த நிலையில், குடமுழுக்கு நாளன்று கோயிலில் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதை மா்ம நபா்கள் சாதகமானப் பயன்படுத்திக் கொண்டு, பெண்கள் பக்தா்களிடமிருந்து 45 புவன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நகைகளைப் பறிகொடுத்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் நான்கு நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.