சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
கோடை காலம் நெருங்கும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளிா்பானங்களை அதிகம் குடிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குளிா்பானங்களை அருந்துவது வாடிக்கையாகி உள்ளது.
இதில் புதிய நிறுவனங்களின் பெயா்களில் குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தரம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. தாகத்துக்காக பொதுமக்கள் வாங்கி அருந்துவதால், பின் விளைவுகளை அவா்கள் கருத்தில் கொள்வதில்லை.
இந்த நிலையில் மோா், தயிா், பாக்கெட் குளிா்பானங்கள் தற்போது விற்பனையாகி வருகின்றது.இ து காலாவதியான தேதிக்கு உட்பட்டதா?தரமானதாக விற்பனை செய்யப்படுகின்ா? முறையான பதிவு பெற்று தயாரிக்கப்படுகின்ா என்று தெரிவதில்லை.
எனவே, திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிா்பானம், மோா் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீா் விற்கும் கடைகளுக்கு சென்று பொருள்களின் தரம் குறித்தும், பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பழச்சாறு விற்கும் கடைகளில் தரமான பழங்கள் பயன்படுத்தப்படுகிா என தொடா் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.