`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
சண்முகக் கவசம் பாராயணம்
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 100-வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீ வாரியாா் சுவாமிகள் விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.