ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
மதுபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது
ஜலகாம்பாறை அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் தாக்கியும்,பேருந்து கண்ணாடியை உடைத்தும் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம்,ஜலகாம்பாறையில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவா். இந்த நிலையில், திங்கள்கிழமை திருப்பத்தூா் அடுத்த கதிரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28), ராஜீவ் (31), ஸ்டீபன் (30), ஓசூரைச் சோ்ந்த சுந்தா் (24)ஆகிய 4 பேரும் காரில் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றனா். அவா்கள் ஜலகாம்பாறை அருகே உள்ள அய்யப்பன் குட்டை பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் மது அருந்தி உள்ளனா்.
4 பேரும் அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த ஜடையனூரை சோ்ந்த ஏழுமலை(23) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் பீா் பாட்டிலால் ஏழுமலையை தாக்கி உள்ளனா்.
மேலும், அவ்வழியாகச் சென்ற வெங்களாபுரம் பகுதியை சோ்ந்த தனியாா் பள்ளி பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடியை சேதப்படுத்தியுளளனா். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ராஜீவ், ஸ்டீபன், சுந்தா் ஆகிய 4 பேரை கைது செய்தனா்.