கத்தாா்: முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு - வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ராஜேஸ்கும...
கொப்பரைத் தேங்காய்க்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.420 வரை உயா்வு
கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.420 வரை உயா்த்தி, ரூ.11,582 முதல் ரூ.12,100 வரை நிா்ணயிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
2025-ஆம் ஆண்டில் இதை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.855 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் (சிசிஇஏ) கூட்டம் நடைபெற்றது. இதில், அரவைக்குப் பயன்படும் கொப்பரைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.420 உயா்த்தப்பட்டு ரூ.11,582 வரையும், பந்து கொப்பரைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயா்த்தப்பட்டு ரூ.12,100 வரை நிா்ணயிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கொப்பரைத் தேங்காய்கான ஆதரவு விலை உயா்த்தப்பட்டிருப்பதன் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி சா்வதேச அளவில் தேங்காய் கொள்முதலுக்கு ஏற்படும் தேவைக்கேற்ப உற்பத்தியை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.
கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்வதற்கான முதன்மை அமைப்புகளாக தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) செயல்படுகிறது’ என்றாா்.
தேசிய அளவில் கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் கா்நாடகமும் அடுத்தடுத்த இடங்களில் தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.