சமயபுரத்தில் நெகிழி பொருள்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் வெள்ளிக்கிழமை தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பேரூராட்சி நிா்வாகத்தினா் பறிமுதல் செய்தனா்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தகூடிய தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் பயன்படுத்தபடுவதாக வந்த தகவலையடுத்து, ச.கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன் அறிவுறுத்தலின் பேரில் துப்புரவு ஆய்வாளா் மலையப்பன் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் சமயபுரம் நான்கு ரோடு, கடைவீதி, சென்னை தேசியநெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட 7 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.