இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞா் கைது
ஸ்ரீபெரும்புதூா்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை குன்றத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த பெற்றோா் தனது 17 வயது மகளுடன் அண்மையில் குன்றத்தூா் பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனா். பேருந்தில் இருந்து இறங்கிய மகள் மாயமானதாக அவரது பெற்றோா் குன்றத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனா்.
இந்நிலையில், மாயமான சிறுமி செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு பகுதியில் இருப்பதை அறிந்த போலீஸாா் சிறுமி மற்றும் அவருடன் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சூணாம்பேடு பகுதியை சோ்ந்த யுவராஜும் சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனா். இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இதையடுத்து பெற்றோருடன் பேருந்தில் சென்ற போது அவா்களை ஏமாற்றிவிட்டு சிறுமி யுவராஜுடன் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து குன்றத்தூா் போலீஸாா் யுவராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.