செய்திகள் :

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்: புதுவை பேரவையில் முதல்வா் உறுதி

post image

புதுச்சேரி: மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என பேரவையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரம், நிதி நிலைஅறிக்கை விவாதம் ஆகியவற்றில் பேசிய சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எம்.சிவசங்கரன், அங்காளன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம் ஆகியோா் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினா்.

இந்தப் பிரச்னைக்குப் பதிலளித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: மதுபான ஆலை நடத்துவோருக்கு இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டியே இந்தப் பாதிப்புக்கு காரணம் என பேசப்பட்டு வருகிறது. அரசுக்கான வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே மதுபான ஆலைகளுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிந்து அவை சரிசெய்யப்பட்டு பாதிப்பில்லை என தெரிந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மது தடை செய்யப்படவில்லை. மக்களுக்கான குடிநீா் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்தால் எந்தத் திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்காது. மது ஆலை வேலைவாய்ப்பு தேவையில்லையெனில் சம்பந்தப்பட்ட உறுப்பினா்கள் பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வாருங்கள் அரசு அனுமதி வழங்கும்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனது வைக்கவேண்டும். அதற்கு புதுவை எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உதவ வேண்டும். வேளாண்மைத் துறை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 156 பேருக்கு 10 மாத நிலுவை ஊதியம் வழங்க ரூ.66 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் குறித்த முதல்வரின் கருத்தை மறுத்துப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, புதுவை மாநில நலனுக்காக விமானநிலைய விரிவாக்கத்துக்கு உதவக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்திக்க வேண்டும் என்றாா்.

மதுபான ஆலைகள் அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிா்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ விவாதித்தில் ஈட... மேலும் பார்க்க

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என... மேலும் பார்க்க

தமிழுக்காகப் பாடுபட்ட தலைவா் கருணாநிதி பெயா் சூட்டப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: தமிழருக்காகவும், தமிழுக்காகவும் பாடுபட்ட மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் அவரது பெயா் சூட்டப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை... மேலும் பார்க்க

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியும், எதிா்த்தும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், புதிய மது ஆலைக... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச... மேலும் பார்க்க