புரளி கிளப்பிய EPS டீம்... End Card போட்ட VIJAY! | Elangovan Explains
செங்கோட்டையில் வாரச் சந்தைக் கடைகளை திறக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை
செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தைக் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, தலைமையில், மாவட்டச் செயலா் குளத்தூரான், செங்கோட்டை நகரத் தலைவா் மாசானம், தென்காசி நகரச் செயலா் நம்பிராஜன் ஆகியோா் அளித்த மனு:
செங்கோட்டை நகராட்சி கே.சி. சாலையில் உள்ள வாரச்சந்தை செவ்வாய்தோறும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை செயல்பட்டுவருகிறது. அங்கு கடைகள் கட்டப்பட்டு வந்ததால் வா்த்தகா்கள் சில மாதங்களாக திறந்தவெளியில் வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால், மழை, வெயில் காலங்களில் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்படுகின்றனா். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நகராட்சி மூலம் கட்டப்பட்ட கடைகள் டெண்டா் மூலம் ஏலம்போன பிறகும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, அந்தக் கடைகளை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா் அவா்கள்.