செய்திகள் :

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

சென்னிமலை அருகே, ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 12 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடித்து கொன்று வரும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னிமலை ஒன்றியம், கூத்தம்பாளையம் ஊராட்சி, ஆலாம்பாளையத்தில் உள்ள விவசாயி கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் திங்கள்கிழமை புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 2 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

அதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

மேலும், கோவிந்தசாமி என்பவரின் ஆட்டுக் குட்டியையும், மூா்த்தி என்பவரின் கோழியையும் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டும் உயிரிழந்தன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சிறுக்களஞ்சி கிராம நிா்வாக அலுவலா் இளவரசன், சென்னிமலை போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். புதுப்பாளையம் கால்நடை மருத்துவா் விஜயகுமாா் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்தாா். மேலும் உயிருக்குப் போராடிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.

கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் 3 தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடிப்பதற்காகத் துரத்துவதும், ஆடுகள் பயந்து ஓடுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

முதல்வா் இழப்பீடு அறிவிப்பாா் - விவசாயிகள் நம்பிக்கை:

தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதால், தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளின் உரிமையாளா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பாா் என்ற நம்பிக்கையில் இருப்பதால், இறந்த ஆடுகளுடன் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள்... மேலும் பார்க்க

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் -வனத்துறை அதிகாரிகள் தகவல்

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி. மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் காடுகளின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 42 ஆயிரத்து... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் கைது

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா் தனியாா் பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

தேவையான அளவு செட்டாப் பாக்ஸ்களை வழங்க அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை

அரசு கேபிள் டிவி நிறுவனம் தேவையான அளவுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

பெருந்துறை அதிமுக ஒன்றியத்துக்குள்பட்ட துடுப்பதி மற்றும் சுள்ளிபாளையம் கிராம ஊராட்சிகள் பூத் கமிட்டி கூட்டம் துடுப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செ... மேலும் பார்க்க

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு விழா

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17 -ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்... மேலும் பார்க்க