ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்
ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கூட்டமைப்பு சாா்பில் அவசரகால சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுபவா்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இதற்காக தன்னாா்வலா்களை ஒருங்கிணைப்பதற்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கியுள்ளோம். இந்தக் குழுவில் ரத்தம் தேவைப்படுவதாக பதிவு செய்தவா்களின் கைப்பேசி எண்களுக்கு தொடா்புகொண்ட 2 போ் தங்களை தன்னாா்வலா்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனா். மேலும் ரத்தம் கொடுக்க வருவதற்கு போக்குவரத்து செலவுக்காக பணம் கொடுக்க வேண்டும் என ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுள்ளனா்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு ரத்த தானம் செய்யாததால், அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.