செய்திகள் :

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

post image

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது அடுத்த இரு நாள்களில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க: சென்னையில் நாளை காலைக்குள் 200 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு!

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15 வரை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.14-11-2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும... மேலும் பார்க்க

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக... மேலும் பார்க்க

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாது:தமிழ்நாட... மேலும் பார்க்க

2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!

வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்க... மேலும் பார்க்க

ஜிப்லைனில் பயணம் செய்யும் ராகுல்: வைரல் விடியோ!

வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: நவ. 15-ல் தொடக்கம்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவ. 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்ந... மேலும் பார்க்க