ஜீப் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
தேனி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது ஜீப் மோதி கவிழ்ந்ததில் வெள்ளிக்கிழமை விவசாயி உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியராஜ் (42). இவா் வைகை அணையிலிருந்து கருவேல்நாயக்கன்பட்டிக்கு ஜீப்பில் சென்றாா். அப்போது, அரப்படித்தேவன்பட்டி பகுதியில் சாலை தடுப்புச் சுவா் மீது ஜீப் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.