Viduthalai 2: "மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய அரசியல் இது..." - 'விடுதலை 2' குறித்து...
ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே பயங்கர தீ!
ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே ரசாயன லாரி மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயாா்: புதின்
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், ரசாயன லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில், அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் நிலையத்தில் தீ பிடிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.