செய்திகள் :

வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!

post image

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விடுதலை முதல் பாகத்தில் காவலரான சூரி, ரயில் குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட வாத்தியார் விஜய் சேதுபதியை துரத்திப் பிடித்து போலீஸ் முகாமுக்குக் கொண்டு செல்வதுடன் நிறைவடைந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் வாத்தியார் சொல்கிற இன்னொரு கோணமும், காவல்துறை மற்றும் அரசியல் அதிகாரங்கள் எப்படியெல்லாம் மக்கள் மீது தங்கள் அடக்குமுறையை செலுத்துகின்றன என்பதையும் சில அரசியல் நோக்கத்துக்காக வாத்தியரை அணுகுவதுமாக உருவாகியிருக்கிறது.

இடதுசாரி சிந்தனையாளாராகத் தோன்றும் கேகே (கிஷோர்), பெருமாள் வாத்தியாரை மக்களுக்கான போராட்டங்களை வழிநடத்திச் செல்பவராக மாற்றுகிறார். ஆனால், ஒருகட்டத்தில் வாத்தியார் போராட்டங்களை விடுத்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்து சில கொள்கைகளை சேர்த்து ஒரு அமைப்பைத் துவங்குகிறார். இந்த அமைப்பு என்னென்ன செய்தது, இந்த வன்முறைப் போராட்டத்துக்கான காரணங்கள் என்ன என விரிகிறது விடுதலை - 2.

இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தன் பாணி வன்முறையை, நிர்வாணக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த விதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை நிர்வாணமாக சித்தரவதை செய்வது, பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டியது என எதிலும் நமக்கு எமோஷனல் கிடைக்கவில்லை. திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன.

வாத்தியாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் என்ன தேவை என்பதையே மறக்க வைக்கும் அளவிற்கு அரசியல் வசனங்கள் சோதிக்கின்றன. இளமையில் தீவிரமாக வன்முறையை நம்பும் வாத்தியார் வயதாகும்போது வன்முறை தீர்வல்ல என்கிற இடத்தை நோக்கி நகர்கிறார். வாத்தியார் சிந்தனை மாற்றிய தோழர் கேகே ஆரம்பித்திலேயே வன்முறை கூடாது என்கிறார்.

அப்போது, அதை மறுக்கும் வாத்தியார் ஆயுத்தத்தை தூக்கி இறுதியில், ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள்’ என்கிற இடத்திற்கு செல்கிறார். விசாரணை படத்திலேயே காவல்துறையின் அமைப்பு எப்படியானது என விலாவரியாக விளக்கிய வெற்றி மாறன் விடுதலை - 2 படத்திலும் அதைக் கூறுவது, பார்த்ததையே பார்க்கும் எண்ணத்தையே தருகிறது.

விஜய் சேதுபதி

காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளது. சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்படுகிறது.

பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்கள், அட்டூழியங்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான, சகதியில் வைத்து சாட்டையால் அடிக்கும் காட்சிகள் பதற்றத்தைத் தரும் வகையில் சரியாக எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல், அதிகாரம் இவற்றுக்கு இடையேயான சில வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், ராஜிவ் மேனன், சேத்தன் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களில் குறையில்லாமல் நடித்திருக்கின்றனர். இளையராஜாவின் பின்னணி இசையும், ’மனசுல ஒரு மாதிரி’ பாடலும் கதைக்கு வலு சேர்க்கிறது. கலை இயக்குநர் ஜாக்கி 1960 - 1990 காலகட்டத்தை முடிந்தவரை தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார். போஸ் வெங்கட் சாட்டையால் நடிக்கும் இடம் இதுவரை தமிழ் சினிமாவில் பதிவாகாத ஒன்று.

ஆனால், ஒளிப்பதிவு, எடிட்டிங் பகுதிகளில் வெற்றி மாறன் மீண்டும் மீண்டும் சில தவறுகளை செய்துகொண்டே இருக்கிறார். பல இடங்களில் கேமரா தடுமாறுவதும் டப்பிங்கில் திடீரென வேறு ஒருவரின் குரல் மாறுவது என வடசென்னையிலிருந்து தொடரும் சொதப்பல்கள் நிற்கவில்லை.

சில அரசியல் கருத்துகளை, கொள்கைகளை வைத்து தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெற்றி மாறன் பதிவு செய்த படமான இது எத்தனை பேருக்கு சரியாகப்புரியும் என்பது தெரியவில்லை. கிளைமேக்ஸில் இதுதான் நடக்கும் என ஊகிக்க முடிந்தாலும் ஒரு தலைவராக விஜய் சேதுபதி பேசும் சில வசனங்களும் முடிவும் அனுபங்களால் மனிதன் செல்லும் இடம் வன்முறையா இல்லை அகிம்சையா என உணரவைத்திருக்கிறார் இயக்குநர்.

இருந்தாலும், விடுதலை திரைப்படத்தை ஒரே பாகமாக முடித்திருக்கலாம். இரண்டாவது பாகம் தேவையற்ற திணிப்பாகவே தோன்றுகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய பாடல்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடு... மேலும் பார்க்க

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

நடிகர் சூரி விடுதலை - 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4... மேலும் பார்க்க

விடாமுயற்சியில் இணைந்த பிரபலம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப... மேலும் பார்க்க

கங்கனாவின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மகிழ்ச்சி..!

கங்கனாவின் அற்புதமான எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதியளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியுள்ளார். எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்த... மேலும் பார்க்க

புதிய திரைக்கதையுடன் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹான் புதிய திரைக்கதை குறித்து பதிவிட்டுள்ளார்.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் கூல... மேலும் பார்க்க

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதா? இது வயதானவர்களை மட்டும்தான் பாதிக்குமா? நீரிழிவு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் பெங்களூரு அஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை சுரப்... மேலும் பார்க்க