டயர் அழுத்தம் அமைப்பில் சிக்கல் காரணமாக வாகனங்களை திரும்பப் பெறும் டெஸ்லா!
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தில் உள்ள எச்சரிக்கை விளக்கில் உள்ள சிக்கல் காரணமாக டெஸ்லா கிட்டத்தட்ட 7,00,000 வாகனங்களை திரும்ப அழைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் கடிதத்தின்படி, திரும்பப் பெறுவதில் உள்ள மாடல்களான 2024ல் தயாரிக்கப்பட்ட சைபர்ட்ரக், 2017 முதல் 2025 வரையான மாடல் 3 மற்றும் 2020 முதல் 2025 மாடல் ஒய் ஆகிய வாகனங்களாகும்.
இதையும் படிக்க: தடுமாறும் நிறுவனங்கள்: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்!
சிக்கல் என்னவெனில், வாகனங்களில் உள்ள டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தில் எச்சரிக்கை விளக்கு இடையில் ஒளிராமல் போகலாம். இந்த குறைந்த டயர் அழுத்தத்தைப் பற்றி ஓட்டுநரை எச்சரிக்கத் தவறிவிடும் வேளையில், இது விபத்து அபாயத்தை அதிகரிக்க கூடும்.
இது குறித்த அறிவிப்பு கடிதங்கள் பிப்ரவரி 15, 2025 முதல் பயனர்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் தலைமையிலான வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்த சிக்கலை சரிசெய்ய இலவச மென்பொருள் புதுப்பிப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.