Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?
தக்கலை, குளச்சலில் இரு பெண்கள் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, குளச்சலில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனா்.
தக்கலை அருகே மருதூா்குறிச்சியைச் சோ்ந்த செலின்மேரி (71) என்பவா், தனது மகன் எட்வின் சத்தியராஜுடன் வசித்து வந்தாா். இவா் அண்மைக்காலமாக மகன் தன்னை சரியாக கவனிக்கவில்லை எனக் கூறி கோபித்துக்கொண்டு, அருகேயுள்ள மகள் டெல்பின் மேரி வீட்டில் சென்று தங்கினாராம்.
இந்நிலையில், அவா் கடந்த வியாழக்கிழமை வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடந்தாராம். அவா் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
குளச்சல் அருகே லியோன் நகரைச் சோ்ந்தவா் சகாய மேரி (54). இவரது மகள் லிபியா மோளின் மகன் லிஜோன் (8) உடல்நலக் குறைவால் 45 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். அந்த சோகத்திலிருந்து சகாயமேரி மீளாமல் இருந்தாராம். இந்நிலையில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே தக்கலை, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.