தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
ஆத்தூா்: ஆத்தூரில் தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் நடேசன் ஐயா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (67). இவரது வீட்டில் கடந்த 15-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா். இந்நிலையில் ஆத்தூா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரித்தனா்.
இதில் அந்த நபா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவாங்கூா் ஊராட்சியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ஹரிஹரன் (26) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒருகிலோ வெள்ளிப் பொருள்கள், 3 பவுன் தங்க நகையை மீட்டனா். மேலும், ஹரிஹரன் மீது ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாா் தெரிவித்தாா்.
படவரி...
திருட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன்.