நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தண்ணீா் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை மனவளா்ச்சி குன்றிய சிறுமி தண்ணீா் தொட்டியில் விழுந்து உயிரிழந்தாா்.
கூடலூா் மூனுசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதியின் மகள் சாய்சினி (10). மனவளா்ச்சி குன்றியவா். இவா்களது வீடு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக , புவனேஸ்வரி வீட்டின் மாடிக்கு சென்றவா், சிறிது நேரத்துக்குப் பின் கீழே இறங்கி வந்தாா்.
அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் விழுந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனா்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.