செய்திகள் :

தயார் நிலையில் நிவாரண மையங்கள்: துணை முதல்வர் உதயநிதி

post image

329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

மேலும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

அடுத்த நான்கு நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சாராசரியாக 36 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 55 மி.மீ, அதிகபட்சமாக பெருங்குடியில் 74 மி.மீ மழையும், செங்கல்பட்டில் 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

1,494 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.158 அதி விரைவு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும், அக்டோபர் மாதம் பெய்த மழையை கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவி இருக்கிறோம்.

இதையும் படிக்க: கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. கணேசபுர சுரங்கப்பாதையை தவிர மற்ற 21 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.

கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சுரங்கப்பாதை மூடி வைக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மக்கள் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 22,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று இரவில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாக குறித்த கேள்விக்கு, இன்னும் சற்று நேரத்தில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.14-11-2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும... மேலும் பார்க்க

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக... மேலும் பார்க்க

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாது:தமிழ்நாட... மேலும் பார்க்க

2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!

வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்க... மேலும் பார்க்க

ஜிப்லைனில் பயணம் செய்யும் ராகுல்: வைரல் விடியோ!

வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: நவ. 15-ல் தொடக்கம்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவ. 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்ந... மேலும் பார்க்க