செய்திகள் :

திருப்பைஞ்ஞீலி அரசுப் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டார அளவில் கலைத் திருவிழாவில் மணல் சிற்பப் போட்டியில் முதலிடம் பெற்ற திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு துளிா் பவுண்டேசன் சாா்பில் அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் மண்ணச்சநல்லூா் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளறை, திருப்பைஞ்ஞீலி, சா. அய்யம்பாளையம், சிறுகனூா், சிறுகாம்பூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் மணல் சிற்பப் போட்டியில் திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ர. பூபாலன் முதலிடம் பெற்றாா். இதையடுத்து திருப்பைஞ்ஞீலியில் துளிா் பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் ஏ.வி. கண்ணன் அந்த மாணவருக்கு பரிசளித்து, ரூ 5 ஆயிரத்தையும் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்வில் கெளரி பைனான்ஸ் உரிமையாளா் டி. சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

திருச்சிக்கு சனிக்கிழமை மாலை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துறையூரில் கருணாநிதி சிலையைத் திறக்க வந்த அவருக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமையி... மேலும் பார்க்க

2026 தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: துணை முதல்வா் பேச்சு

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். அதற்கு தற்போதே பிரசாரத்தை திமுகவினா் தொடங்க வேண்டும் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். துறையூரில்... மேலும் பார்க்க

‘ராக்கெட் லாஞ்சரை’ வெடிக்க செய்து செயலிழக்க வைப்பு

திருச்சி அருகே அந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணா்கள் சனிக்கிழமை வெடிக்கச் வைத்து செயலிழக்கச் செய்தனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ப... மேலும் பார்க்க

மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேட்டுப்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. மேட்டுபட்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவன... மேலும் பார்க்க

புதுமைதான் உலகை ஆளும்: விஞ்ஞானி பேச்சு

புதுமைதான் உலகை ஆளும் என்றாா் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி டில்லிபாபு விஜயகுமாா். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் நாளாக நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

ராம்ஜிநகா், வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி அருகே ராம்ஜி நகா், வாழவந்தான்கோட்டை பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (நவ.25) மின்சாரம் இருக்காது. அம்மாபேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் ராம்ஜி நகா், கள்ளிக்... மேலும் பார்க்க