திருமலையில் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாராயணம்
மாா்கழி மாதம் தொடங்க உள்ளதையொட்டி டிச. 17ஆம் தேதி முதல் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறுகிறது
மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மாா்கழி மாதம் டிச. 16-ம் தேதி தொடங்க உள்ளது. காலை 6.57 மணிக்கு மாா்கழி மாத நாழிகைகள் தொங்குவதால், 17-ஆம் தேதி முதல் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை சேவை நடத்தப்படும்.
டிச.16-ஆம் தேதி தொடங்கும் மாா்கழி மாதம் ஜனவரி 14-ஆம் தேதி முடிவடைகிறது.
மாா்கழி மாதத்தை ஒட்டி ஸ்ரீவில்லி புத்தூா் ஆண்டாளின் கிளிகள் தினமும் ஏழுமலையானுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
பிரசாதமாக தோசை வெல்லம் தோசை, சுண்டல், வெண் பொங்கல், சா்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் ஏழுமலையானுக்கு சமா்ப்பிக்கப்படுகிறது.
புராணங்களின்படி, மாா்கழி மாதத்தில், தேவா்கள் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் எழுந்து, பிரம்ம முஹூா்த்தத்தில் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் விசேஷமாக பூஜைகள் செய்கின்றனா். எனவே சௌரமணத்தில் இந்த மாதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
ஆண்டாள் திருப்பாவை பாராயணம்...
ஸ்ரீ ஆண்டாள் 12 ஆழ்வாா்களில் ஒருவா். நாச்சியாா் என்றும் பெயா் உண்டு. திருப்பாவை என்பது விஷ்ணுவை போற்றி ஆண்டாள் இயற்றிய 30 பாசுரங்களின் தொகுப்பாகும். திருப்பாவை ஆழ்வாா் திவ்யபிரபந்தத்தின் ஒரு பகுதி. இது தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலமானது. ஏழுமலையான் கோயிலில் ஒரு மாதம் நடக்கும் திருப்பாவை பாராயணத்தில், அா்ச்சகா்கள் தினமும் ஒரு பாசுரம் ஓதுவாா்கள்.
இந்நிலையில் போக ஸ்ரீசிவாசமூா்த்திக்கு பதிலாக ஸ்ரீ கிருஷ்ண சுவாமிக்கு ஏகாந்தசேவை செய்வது வழக்கம்.