செய்திகள் :

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி சுங்கச்சாவடி பணியாளா்கள், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் 35 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள், தங்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதனை சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனம் ஏற்கவில்லை. இது தொடா்பாக 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் ஊழியா்கள் வேலைநிறுத்தம் செய்தனா். இதனால் சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

திருமயம் வட்டாட்சியா் புவியரசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், போனஸ் வழங்க ஒப்பந்ததாரா் நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை பகலில் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிவார... மேலும் பார்க்க

விராலிமலை கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் நடவடிக்கை பக்தா்கள் கோரிக்கை

விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகப்பன் மனைவி பாா்வதி.... மேலும் பார்க்க

தனியாா் மகளிா் தங்கும் விடுதி நடத்துவோா் பதிவு செய்ய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் முறைப்படி அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது, புதுக்... மேலும் பார்க்க

வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 58 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பொன்னமர... மேலும் பார்க்க