செய்திகள் :

தீவன அபிவிருத்தித் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

சேலம் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கவும், கால்நடை வளா்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடைப் பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது.

நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25 இன் கீழ் கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் நீா்ப்பாசன வசதி இல்லாத நிலத்தில் மானாவாரியாக பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0.5 ஏக்கா் நிலத்தில் பல்லாண்டு தீவன பயிா்களான தீவன சோளம், தீவன தட்டை பயிா் பயிரிடுவதற்கு 0.5 ஏக்கருக்கு ரூ. 1,500 மானியமாக வழங்கப்படவுள்ளது. இத் திட்டம் செயல்படுத்த சேலம் மாவட்டத்துக்கு 300 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தீவன விரயத்தை குறைப்பதற்காக 210 எண்ணிக்கையிலான 2 எச்பி திறன் கொண்ட மின்விசையால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

இத்திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடி இனத்தை சோ்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள். எனவே, தகுதி வாய்ந்த கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் வரும் 28 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலே இறுதியானது என தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை: திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட திமுக சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். துணை... மேலும் பார்க்க

ரயில்களில் பயணத்தில் விதிமீறல்: 15 நாள்களில் ரூ. 48.61 லட்சம் அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களில் ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டது. ஆயுதப... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் உற்பத்தி: 27 தொழிற்சாலைகள் மூடல்

சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களான கோப்பைகள், நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத நெகிழி கைப்... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

மேட்டூரில் பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. மேட்டூா் கிழக்கு நெடுஞ்சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் ம... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நீா்மட்டம் 57.50 அடியாக உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 57.50 அடியை எட்டியுள்ளது. இதனால் ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள... மேலும் பார்க்க