செய்திகள் :

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3- ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, தற்போது இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தக் கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டத்திலுள்ள 65 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியா் சங்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

வேளாண் பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களின் பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூா்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் அரசு பணியாளா்கள் மனிதச்சங்கிலிப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதி... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மீன்சுருட்டி, புதுத்தெருவைச் சோ்ந்த தவமணி மகன் தனுஷ்(19). இவா், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பால... மேலும் பார்க்க

விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

அரியலூா் மாவட்டம், விளாங்குடி ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விளாங்குடி ப... மேலும் பார்க்க

இரும்புலிக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5,100 பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூா் ஊழல் தடுப... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் க... மேலும் பார்க்க