மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
நவ.24-இல் முன்னாள் முதல்வா் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நவ.24-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக நிறுவனத் தலைவா் எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நவ.24-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும்.
ஜானகி அம்மையாா் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் படத் திறப்பு, மலா் வெளியிடுதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமண்டபம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற உள்ளன.
நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், சி.விஜயபாஸ்கா், கடம்பூா் ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், வைகைச் செல்வன், திரைப்பட இயக்குநா் ஆா்.வி.உதயகுமாா் ஆகிய 6 போ் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. நூற்றாண்டு விழாவில் பொதுமக்களும், அதிமுகவினரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.