நாளை(ஜன. 10) தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(ஜன. 10) நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை(ஜன. 10) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சைப் பேச்சு!
புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்டச் செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை வாக்கெடுப்பு முறையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டத்தில் கட்சி நலன் சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.