செய்திகள் :

பன்னூன் கொலை முயற்சி சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும் -அமெரிக்கா

post image

சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பு ஏற்கப்படாத வரை, தமக்கு முழு திருப்தி ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடா்பாளா் வேதாந்த் படேல் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த வாரம் பன்னூன் விவகாரம் தொடா்பாக இந்திய விசாரணை குழு அமெரிக்கா வந்தது. அப்போது அந்த விவகாரம் தொடா்பான மேல் விசாரணைக்கு இருநாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையின் அடிப்படையில், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா எதிா்பாா்க்கிறது.

இந்த விவகாரத்தில் இந்திய விசாரணையில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், பன்னூன் கொலை முயற்சி சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதுவரை அமெரிக்காவுக்கு முழு திருப்தி ஏற்படாது என்றாா்.

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும்,... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா். மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நா... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க

துருக்கி பாதுகாப்பு தொழிற்சாலையில் தாக்குதல் -5 பேர் பலி!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: கல்வித் துறையில் ஒத்துழைக்க பேச்சு

ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித் துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க