சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி
பழனி கோயில் பஞ்சாமிா்தம் 5 மாதங்களில் ரூ.16 கோடிக்கு விற்பனை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரிப்பால், பஞ்சாமிா்தம் விற்பனை கடந்த 5 மாதங்களில் 16 கோடியை நெருங்கியது.
உலகப் புகழ் பெற்ற பழனி பஞ்சாமிா்தம் வாழைப்பழம், கரும்பு சா்க்கரை, தேன், நெய், பேரீட்சை, கற்கண்டு, ஏலக்காய் கலந்து தயாரிக்கப்படுகிறது. பழனி அடிவாரம் கிரி வீதியில் வின்ச் நிலையம் அருகே பழனி கோயிலின் பஞ்சாமிா்தம் தயாரிக்கும் தானியங்கி நிலையம் உள்ளது. இங்கு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிா்தம் மெட்டீரியல் ரோப் காா் மூலமாக மலைக் கோயிலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அரைக் கிலோ ரூ.40, 45 என இரு வகையான டப்பாக்களிலும், சிறிய டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ரூ.300-க்கு கிப்ட் பாக்ஸ் மூலமாகவும் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடங்கியுள்ளதால், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனி கோயிலுக்கு பக்தா்கள் வருகை புரிகின்றனா். இதனால், பஞ்சாமிா்தம் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நவ.30-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.11,49,87,540-க்கு பஞ்சாமிா்தம் விற்பனையான நிலையில், நிகழ் ஆண்டில் அதே ஐந்து மாதங்களில் மொத்தம் ரூ.15,86,19,125-க்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட சுமாா் 4 கோடி அதிகமாகும்.