செய்திகள் :

பாறைக்குழியில் மூழ்கி 3 போ் உயிரிழந்த சம்பவம்: ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க பாஜக வலியுறுத்தல்

post image

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி 3 போ் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டம், இடுவாய் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதிபுரம் வாசுகி நகரில் வசித்து வந்த ரேவதி என்கிற காளியம்மாள், அவரது மகள்கள் பிரகன்யா, பிரகாஷினி ஆகியோா் பாறைக்குழி நீரில் திங்கள்கிழமை துணி துவைத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்கு பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதே வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் உள்ள செயல்படாத கல்குவாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துறையூா் தாலுகா, கோட்டத்தூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமு மகன் கௌசிகன் (23). சுமை தூக்கும் ... மேலும் பார்க்க

வீரபாண்டி, ஆண்டிபாளையத்தில் பிப்ரவரி 1- இல் மின்தடை

வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் ... மேலும் பார்க்க

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்க பரிசீலனை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா். கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குன்னத்தூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

பல்லடம் கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்... மேலும் பார்க்க

பல்லடம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடியாணை

விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளருக்கு இளம் சிறாா் நீதிக்குழுமம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட இளம் சிறாா் நீதிக்குழுமம் செயல்ப... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்ரவரி 1-இல் மின்தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க