பாலியல், கஞ்சா வழக்குகள்: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
தஞ்சாவூா் பாலியல், கஞ்சா வழக்குகளில் கைதான 4 பேரை காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டத்துக்குட்பட்ட முக்குளம் சாத்தனூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மகன் தவசீலன் (20). இவரையும், அதே ஊரிலுள்ள ஆதிதிராவிடா் காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் கிருஷ்ணன் என்ற முத்துப்பாண்டியனும் (27) பாலியல் வழக்கு தொடா்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் செப். 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்துக்குட்பட்ட கூடலூா் சி. பரமேஸ்வரன் (58), ஆண்டிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பிராதுகாரன்பட்டி வடக்குத் தெரு எஸ். ஜெயக்குமாா் (50) கஞ்சா வழக்கு தொடா்பாக கபிஸ்தலம் காவல் நிலையத்தினரால் அக். 17 இல் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தவசீலன், முத்துப்பாண்டியனை வியாழக்கிழமையும், பரமேஸ்வரன், ஜெயக்குமாரை புதன்கிழமையும் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.