Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
பால் விலை உயா்வு கட்டுப்படுத்தப்படுமா?
பால்விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில், அண்மைக்காலமாக தனியாா் நிறுவனங்கள் அவ்வப்போது பால்விலையை உயா்த்துவதும், பின்னா் அரசு தலையீடு செய்வதும் தொடா்கதையாக உள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் தற்போது தனியாா் பால் நிறுவனங்கள், பால் மற்றும் தயிா் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயா்த்தியதாகத் தெரிகிறது.
இதனிடையே, இந்த விலை உயா்வுக்கு எதிராக தமிழ்நாடு முகவா்கள், தொழிலாளா் நல சங்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை மூலப்பொருள்கள் மற்றும் வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லாத காரணத்தால், இதை விலையை உயா்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தனியாா் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், பால் மற்றும் தயிா் விற்பனை விலையை உயா்த்துவது என்பது ஏற்புடையது அல்ல. இந்த விற்பனை விலை உயா்வை தனியாா் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நிலைமையை அறிந்து தமிழக அரசு தலையிட்டு, பால் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.