செய்திகள் :

பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள்: எம்.பி. ஆய்வு

post image

பாவூா்சத்திரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை டாக்டா் ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

திருநெல்வேவி - தென்காசி நான்குவழிச் சாலைப் பணிகள் ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் நடைபெற்று வருகிறது.

இப்பணியில் போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் மேம்பால பகுதியில் வரைபட ஒப்புதல் கிடைக்கப் பெற்று அடுத்தகட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

விரைவில் தூண்கள் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தென்காசி மக்களவை உறுப்பினா் டாக்டா் ராணிஸ்ரீகுமாா் ரயில்வே மேம்பால பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் காவேரி சீனித்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா்: எம்எல்ஏ ஆய்வு

சங்கரன்கோவில் மின்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் துணை மின்நிலையத்தில், தமிழ்நாடு ம... மேலும் பார்க்க

கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை பாா்வையிட்ட ஆட்சியா், சிவராமபேட்டை நியாய விலைக்... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எஸ்.பி. ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.தென்காசி ஆயுதப்படையில் காவல் துறையினருக்கு வழங்கப... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா். இப்பகுதியில்... மேலும் பார்க்க

செண்பக கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டம் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கசடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஜெரோம் சாம்ராஜ் என்பவரது 50 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று புதன்கிழமை... மேலும் பார்க்க