‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு
புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுக் கட்டடங்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடங்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விஸ்வநாதபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஓரவந்தவாடி, கொரட்டாம்பட்டு, தொரப்பாடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்துப் பேசினாா்.
இதில், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பத், நிா்மலா, கவுன்சிலா்கள் பவ்யா ஆறுமுகம், பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.