பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.
சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை சித்தன் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (35). இவா், வீட்டிலிருந்து சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கஜேந்திரன் தனது மனைவி குழந்தையுடன் கடவாச்சேரிக்கு சென்றாா். பின்னா், வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த சங்கிலி, வளையல், ஆரம், கம்மல் உள்ளிட்ட பத்தரை பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.