செய்திகள் :

`பெண்களுக்கு அனுமதி இல்லை' - ஆப்கான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு; கை விரித்த மத்திய அரசு

post image

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தப் பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், தொழில்துறைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தாலிபன் அமைச்சர் பயணம்

நேற்று முன்தினம், ஆப்கானிஸ்தானின் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி அரசியல் ரீதியாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.

இந்தியா இன்னமும் தாலிபனின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்தது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.

ஜெய்சங்கர் - அமீர் கான் முத்தகி சந்திப்பு
ஜெய்சங்கர் - அமீர் கான் முத்தகி சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

அவரது வருகையையடுத்து நேற்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அந்தச் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவும் இல்லை... அனுமதிக்கப்படவும் இல்லை.

இது தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி உள்ளிட்ட பலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில்

இந்தச் சம்பவம் குறித்து தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கான அழைப்பிதழ்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளது. இந்திய அரசின் வரம்பிற்குள் ஆப்கானிஸ்தான் தூதரகம் வராது" என்று பதிலளித்துள்ளது.

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க