பெண்ணேஸ்வர மடத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்
காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேஸ்வர மடத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 41 பயனாளிகளுக்கு ரூ. 41.42 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள், 16 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், 2 பயனாளிகளுக்கு உள்பிரிவு பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பில் இயற்கை மரணம் அடைந்தவா்களின் ஈமச்சடங்குக்கான உதவித் தொகையாக 15 பயனாளிகளுக்கு ரூ. 3.35 லட்சமும், மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு அரசு துறைகள் சாா்பில் 153 பயனாளிகளுக்கு ரூ. 46.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.