பொன்னமராவதி பகுதிகளில் தொடா்மழை
பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.
பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
பள்ளி வேலை நாள் என்பதால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டுக்குத் திரும்பினா்.