செய்திகள் :

மணமேடையில் இருந்து பாத்ரூம்-க்கு சென்று மது குடித்த மணமகன்; மணமகள் வீட்டார் அதிர்ச்சி; நடந்தது என்ன?

post image

டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற இடத்தில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இத்திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் மணமேடைக்கு வந்திருந்தனர். முதல் கட்டமாக மணமக்கள் மாலையை மாற்றிக்கொண்டனர். மதச் சடங்குகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. மணமகன் மணமேடையில் இருந்தபோது திடீரென பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

சித்தரிப்பு படம்

அங்குச் சென்று வந்த பிறகு மணமகன் லேசாகத் தள்ளாட ஆரம்பித்தார். இதனால் அவரது செயல்பாட்டில் மணமகள் வீட்டாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அத்தோடு தொடர்ந்து அடிக்கடி மணமகன் பாத்ரூம் சென்று வந்தார். ஒரு முறை பாத்ரூம் சென்றபோது திரும்பவேயில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் பாத்ரூம் சென்று பார்த்தபோது உள்ளே மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரோடு சண்டையிட்டனர்.

ஆனால் மணமகன் தனக்கு அடிக்கடி பாத்ரூம் செல்ல வேண்டியிருக்கிறது என்று ஏதேதோ காரணம் சொல்லிப் பார்த்தார். ஆனால் அந்த காரணத்தைப் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரச்னை போலீஸ் நிலையத்திற்குச் சென்றது. போலீஸார் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. மாப்பிள்ளை வீட்டார் ரூ.10 லட்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டினர். இறுதியில் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. மணமகன் மது ஆசையால் திருமணம் நின்றுபோனது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

ஈரோடு: களைகட்டிய கிறிஸ்துமஸ் விற்பனை... கடை வீதியில் குவிந்த அலங்கார பொருள்கள்.. | Photo Album

கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை ... மேலும் பார்க்க

`தந்தையின் விவசாயத்தை கவனிக்க பரோல் வேண்டும்' - கொலை குற்றவாளிக்கு 90 நாள் பரோல் வழங்கிய கோர்ட்

குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோர்ட் பரோலில் அனுப்புவதுண்டு. பரோலில் வரும்போது எந்த வித தவறும் செய்யாத பட்சத்தில் வருடத்தில் ஒரு முறை பரோலில் வ... மேலும் பார்க்க

தாலியுடன் வந்த 11-ம் வகுப்பு மாணவி; 6 மாதங்களுக்குப் பிறகு தெரிந்த விவரம் - போலீஸ் வழக்குபதிவு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனும், மாணவியும் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களிடை... மேலும் பார்க்க

`சமுதாயம் நிலைக்க குடும்பத்துக்கு 3 குழந்தைகள் அவசியம்' - மோகன் பகவத் வலியுறுத்தல்!

``நாட்டில் மக்கள்தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் சிறுபான்மை சமுதாய மக்கள் தொகை அதிகரித்து வருகிறது" என இந்து அமைப்புகள் கூறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாக்பூரில் நிகழ்ச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `மகனுக்குத் துணை முதல்வர் பதவியா?' - பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளபோதிலும், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. புதிய அரசில் யார் முதல்வர் என்பதிலும், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதிலும் க... மேலும் பார்க்க