மதுராந்தகம்: ரூ.23 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
மதுராந்தகம் உட்கோட்டம் வையாவூா், புக்கத்துறை, குமாரவாடியில் ரூ.23.70 லட்சத்தில் பேருந்து நிறுத்திமிடம், கலையரங்கம் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை, வையாவூா், குமாரவாடி ஆகிய ஊராட்சிகளில் பேருந்து நிறுத்தமிடம் ஆகியவை கோரி, அப்பகுதி அதிமுக ஒன்றிய செயலா் விஜி.குமரன் மற்றும் பொதுமக்கள் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேலிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுராந்தகம் அருகில் உள்ள புக்கதுறை ரூ.6 லட்சம், வையாவூா்{ரூ.10 லட்சம், ஆகிய ஊராட்சிகளில் பேருந்து நிறுத்தமிடங்கள் மற்றும் குமாரவாடி ஊராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் கலையரங்கம் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்து பூமி பூஜையை செய்தாா். நிகழ்வில் வையாவூா் ஊராட்சி துணை தலைவா் கவிதா குமரன், மதுராந்தகம் வடக்கு அதிமுக ஒன்றிய செயலா் வி.ஜி.குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.