இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பெறலாம். திறமையான மாணவா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்வு ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும்.
பிளஸ் 2 தோ்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு 100 சதவீத கட்டண விலக்கு அளிப்பதுடன், இலவசக் கல்வியும், ரூ.5 கோடி வரை நிதியுதவியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.