இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்
மத்திய கல்வி இணையமைச்சர் வருகை: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டுக்கு வருகை தரும் மத்திய கல்வி இணையமைச்சருக்கு எதிராக திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு வரவிருந்தார். தமிழ்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு வலுவானதால் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக கல்வித் துறை இணையமைச்சர் சுகந்த மஜும்தார் விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து சென்னை ஐஐடிக்கு வருகை தரும் மத்திய இணை அமைச்சர் மஜும்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் கிண்டி காந்தி மண்டபம் அருகே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய கல்வி இணையமைச்சருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.