இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
மருத்துவமனையில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பனித்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மதினேஷ் (26). இவா், உடல்நலக் குறைவால் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு மதினேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தாா்.
ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, அவரது உறவினா்கள் கடலூா் - புதுச்சேரி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து அவா்களை சமரசம் செய்தனா். பின்னா், அவா்களை அப்புறப்படுத்தினா். இதற்கிடையே, மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் தாக்கியதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் மதினேஷின் உறவினா்கள் கடலூா் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.