செய்திகள் :

மல்லிப்பட்டினம்: தொடர் மழை; ஒரு அடி உயர்ந்த கடல் நீர் மட்டம்... ``அச்சப்பட தேவையில்லை" -அதிகாரிகள்!

post image

கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து மழை..

தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழை நெற்பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவாசயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மழை மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசை படகுகள்

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மல்லிப்பட்டினத்தில் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

`சூரியனை பார்த்து 3 நாள்கள் ஆகி விட்டது'

இது குறித்து மல்லிப்பட்டினம் துறைமுக கமிட்டியின் மேலாண்மை குழு உறுப்பினர் மீனவராஜன் நம்மிடம் பேசுகையில், "மூன்று நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருட்டிய வானம் இன்னும் விடியவில்லை. சூரியனை பார்த்து மூன்று நாள்கள் ஆகி விட்டது. தொடர் மழையால் பல மீனவ கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து விட்டது.

குறிப்பாக மல்லிப்பட்டினத்தின் ஒரு பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து விட்டது. அதை அந்த பகுதியினரே வாய்க்கால் வெட்டி வடிய வைத்தனர். மழை காரணமாக சுமார் 500 விசை படகு, 200 நாட்டுப்படகு மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீன் பிடியை நம்பியிருக்க கூடிய மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் மீனவராஜன்

ஒரு அடி உயர்ந்த கடல் மட்டம்..

மழை நீர், காட்டாறுகளில் வருகின்ற வெள்ளம் இவை கடலில் கலக்கிறது. இதனால் ஒரு அடி உயரத்திற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இது மழை காலங்களில் நடக்கின்ற வழக்கமான நடைமுறை தான்.

கடந்த வாரம் இதே போல் மற்ற பகுதிகளில் பெய்த மழை காட்டாறுகளில் வந்ததால் கடல் மட்டம் இரண்டு அடி உயர்ந்தது. மழை நின்ற பிறகு வழக்கம் போல் மாறி விட்டது. கடல் நீர் மட்டம் உயர்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அச்சப்பட தேவையில்லை. இது வழக்கமான ஒன்று தான் இதனை மீனவர்கள் அறிவார்கள். பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டையிலிருந்து எல்லையான கட்டுமாவடி வரை இந்த நிலைதான் நிலவுகிறது. வெள்ளம் சூழ்கின்ற பகுதிகளில் ஆக்கப்பூர்வமாக மழை நீரை வடிய வைத்தாலே பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

மழை நேரத்தில் கடல் மட்டம் உயர்வது வழக்கான ஒன்று தான். இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கலள் அச்சம் அடைய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Rain Alert: சென்னை மெரினாவில் பலத்தக் காற்று; வலுப்பெறும் புயல், நவம்பர் 29, 30 தேதிகளில் கனமழை..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த மூன்று நாள்களாக (நவ.26, 27, 28) திருவாரூர், தஞ்சாவூர்... மேலும் பார்க்க

``தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்'' - நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை, அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந... மேலும் பார்க்க

Rain Alert : நவம்பர் 26, 27,28 கன மழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படியிருக்கும்?

தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மூன்று நாள்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ 23) உருவாக ... மேலும் பார்க்க

Red Alert - அபாய கட்டத்தை எட்டிய பூமியின் வெப்பம் | 1.5 degree heat | Climate Change

முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை நிறுவனமான க... மேலும் பார்க்க

ஈரோட்டில் கனமழை... குளமாக மாறிய முக்கிய சாலைகள்.. | Photo Album

ஈரோடு சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர்ஈரோடு சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர்ஈரோடு சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர்ஈரோடு சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர்ஈரோடு சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர்ஈரோடு சாலைகளில் தேங்... மேலும் பார்க்க