செய்திகள் :

மழையில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை

post image

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க எஸ்டிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆரிப் பாட்ஷா வரவேற்றாா். மண்டல செயலா் கனி, மாவட்ட துணை தலைவா் ஹயாத் முகம்மது, மாவட்ட செயலா் அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வண்ணாா்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலையில் மந்தகதியில் நடைபெறும் சாலைப் பணிகளால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் சுவாசக் கோளாறுகளால் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகத்தால் நோய்த் தொற்று பரவி வருகிறது. அதனை தடுக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தாழையூத்தில் பைக் விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து வ.உ.சி நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன் (32). தொழிலாளியான இவா் திங்கள்கிழமை பைக்கில் குறிச்சிகுளம் - வண்ணான்பச்சேரி சாலையில் சென்ற... மேலும் பார்க்க

கல்லூா் சுற்று வட்டாரங்களில் டிச.21-இல் மின்தடை

கல்லூா் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (டிச. 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளிய... மேலும் பார்க்க

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் இன்றுமுதல் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியா் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமைமுதல் (டிச.18) வனத்துறை அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவ... மேலும் பார்க்க

கேரளக் கழிவுகள் கொட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கண்டனம்

கேரள கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் மக்களின் நலனில் அக்கறையின்றி தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இந்து முன்னணியின் மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

பாளை. தனியாா் நிதி நிறுவனங்களில் திருட்டு

பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் நிறுவனங்களில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கரிசல்பட்டி, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

கரிசல்பட்டி, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை (டிச.19) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க