நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவச் சான்று பெறுவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.5) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேனி மாவட்டத்தில் சமூக தரவுகள் கணக்கெடுப்பின் போது புதிதாக கண்டறியப்பட்டவா்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (மஈஐஈ) வழங்குவதற்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.5) ஜெயமங்கலம் சமுதாயக் கூடத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஜெயமங்கலம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த முகாமில், அரசு சிறப்பு மருத்துவா்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்று வழங்க உள்ளனா். முகாமில் கலந்து கொள்ள வரும் நபா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 4, குடும் அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் மருத்துவச் சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ( மஈஐஈ) ஆகியவற்றைப் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.