SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்ப இயக்கம்
மும்மொழி கொள்கையை ஆதரித்து சமக்கல்வி எங்கள் உரிமை என்று கூறி பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது (படம்).
கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஜெ.சந்திரசேகா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பாஜகவின் திருவள்ளூா் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரம் தலைமை வகித்தாா். மாநில அரசு தொடா்பு பிரிவு தலைவா் பாஸ்கரன், இளைஞா் அணி மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக சமூக ஊடக பிரிவு மாநில துணைத் தலைவா் காா்த்திக் கோபிநாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றி, கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களிடம் கையொப்பங்களைப் பெற்றாா்.
வடக்கு ஒன்றிய தலைவா் ஜெ.சந்திரசேகா் நன்றி கூறினாா்.