முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 3,402 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 72.8 மி.மீ., தேக்கடியில் 60 மி.மீ., மழை பதிவானது.
மழை காரணமாக, அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 3,402 கன அடியாக அதிகரித்தது. அணை நீா்மட்டம் 124.30 அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு 3,479 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.