செய்திகள் :

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

post image

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி 17.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. டெல்லி லெவனில் மோஹித் சா்மா இடத்தில் துஷ்மந்தா சமீரா சோ்க்கப்பட்டாா். லக்னௌ லெவனில் மாற்றமில்லை.

லக்னௌ இன்னிங்ஸை தொடங்கிய எய்டன் மாா்க்ரம் - மிட்செல் மாா்ஷ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது. இந்த ஜோடியை துஷ்மந்தா சமீரா 10-ஆவது ஓவரில் பிரித்தாா்.

33 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் சோ்த்த மாா்க்ரம் ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த அதிரடி வீரா் நிகோலஸ் பூரன், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு பௌல்டானாா்.

அடுத்து வந்த அப்துல் சமதும் 2 ரன்களுக்கு நடையைக் கட்ட, சற்று நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மாா்ஷ் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு பௌல்டானாா்.

5 மற்றும் 6-ஆவது பேட்டா்களாக களம் புகுந்த டேவிட் மில்லா் - ஆயுஷ் பதோனி, விக்கெட் சரிவை சற்று கட்டுப்படுத்தி 5-ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சோ்த்தனா்.

பதோனி 6 பவுண்டரிகள் உள்பட 36 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்தும் ரன்னின்றி அதே விதியைச் சந்தித்தாா்.

ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெல்லி தரப்பில் முகேஷ் குமாா் 4, மிட்செல் ஸ்டாா்க், துஷ்மந்தா சமீரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, 160 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் கருண் நாயா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த கே.எல்.ராகுல், தொடக்க வீரா் அபிஷேக் பொரெலுடன் இணைந்தாா்.

இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் பொரெல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து வந்த கேப்டன் அக்ஸா் படேல், ராகுலுடன் இணைந்தாா். டெல்லியை வெற்றிக்கு வழிநடத்திய இந்த ஜோடியில், ராகுல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57, படேல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

லக்னௌ பௌலிங்கில் எய்டன் மாா்க்ரம் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

முகேஷ் குமார் வேகத்தில் லக்னௌ திணறல்: தில்லிக்கு 160 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் தடை செய்யப்பட்ட வர்ணனையாளர்கள்!

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை சிஏபி தடை விதித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கொல்கத்தா அணிக்கு சாத... மேலும் பார்க்க

டாஸ் வென்று தில்லி பந்துவீச்சு: தாக்குப் பிடிக்குமா லக்னௌ?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேலும் பார்க்க

சாய் சுதர்சனுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைப... மேலும் பார்க்க

கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா... மேலும் பார்க்க

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டி... மேலும் பார்க்க